/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது மெகா ஐ.டி., பார்க்
/
டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது மெகா ஐ.டி., பார்க்
டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது மெகா ஐ.டி., பார்க்
டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது மெகா ஐ.டி., பார்க்
ADDED : நவ 05, 2024 11:24 PM
கோவை; தொழில் ரீதியாக பெரிய அளவிலான வளர்ச்சியை கண்டு வரும், கோவையில் அலுவலக இடத்திற்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை மையமாக கொண்டு, டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம், 2வது மெகா ஐ.டி., பார்க் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
இந்நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வில்லாக்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றை சிறந்த தரத்துடன் உருவாக்கி நம்பிக்கையை பெற்றுள்ளது.
நிறுவன நிர்வாக இயக்குனர் சிவராமன் கந்தசாமி கூறுகையில், ''கோவை பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபத்தில் அமையவுள்ள, டேனி சென்சோ இன்போ பார்க் வளாகம் அனைத்து முக்கிய அம்சங்களுடன், தரமான கட்டுமானத்தில், 7 லட்சம் சதுர அடியில் நிறுவப்படவுள்ளது. இதனால், கோவை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ,'' என்றார்.
இதற்கான பூமி பூஜை விரைவில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.