/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வு ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு
/
வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வு ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு
வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வு ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு
வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வு ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு
ADDED : ஜன 20, 2025 06:13 AM
பெ.நா.பாளையம்: வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண, ஆலோசனை கூட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கோவை வடக்கு மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டாலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.
நான்கு தினங்களுக்கு முன்பு பெரியநாயக்கன்பாளையம் புதுப்புதூரில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
இதே போல காட்டு பன்றிகளின் நடமாட்டம் மலையோர கிராமங்கள் மட்டுமல்லாமல், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண, தமிழக வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில்,காட்டுப்பன்றி மட்டுமல்லாமல் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பிரச்சனைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதை ஒட்டி பிப்., 6ம் தேதி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் காலை, 10.00 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.