/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு
/
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு
ADDED : நவ 11, 2025 01:00 AM
கோவை: தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தபோது, சின்னவேடம்பட்டி ஏரிக்கு பவானி ஆற்றின் உபரி நீர் கொண்டு வரப்படும் என, வாக்குறுதி அளித்திருந்தார்.
அதற்கு நேர்மாறாக அரசு அதிகாரிகள் செயல்படுவதால், விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்காததால், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கோவை வடக்கு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு குழு சார்பிலான ஆலோசனை கூட்டம், சின்ன வேடம்பட்டி கவுமார மடாலயத்தில் நடந்தது.
அதில், 'முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சின்னவேடம்பட்டி ஏரியை பராமரிக்கும் பொறுப்பை மாநகராட்சி வசம் நீர்வளத்துறை வழங்கியதை திரும்பப் பெற வேண்டும். பாதாள சாக்கடை கழிவு நீரை, சின்ன வேடம்பட்டி ஏரிக்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரித்த நீரை ஏரியில் விடும் திட்டத்தை மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் திரும்ப பெற வலியுறுத்தி, 14ம் தேதி சின்னவேடம்பட்டி ஏரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது' என, தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் விவேக், மாநகர மகளிரணி செயலாளர் லோகேஸ்வரி, சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் காளிச்சாமி, சின்னவேடம்பட்டி பாதுகாப்பு குழு பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

