/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியற்ற கட்டடங்கள் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க மாநகராட்சியிடம் எதிர்பார்ப்பு

ADDED : நவ 11, 2025 01:00 AM

கோவை: கோவை மாநகராட்சி, 73வது வார்டு பொன்னையராஜபுரம், ராஜம்மாள் லே-அவுட், 88வது வார்டு சுண்டக்காமுத்துார் மெயின் ரோடு அருகே என, பல்வேறு இடங்களில் அனுமதியற்ற கட்டடங்கள் கட்டப்படுவதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் தரப்பில், மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துவரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேற்று நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டனர்.
ஊழல் எதிர்ப்பு இயக்க கோவை மாவட்ட பிரிவு செயலாளர் வேலு கூறியதாவது:
கோர்ட் உத்தரவிட்டும், கோவை மாநகராட்சி பகுதியில் இதுவரை உயர்மட்ட கண்காணிப்பு குழுவால், ஒரு கட்டடம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. இடிக்கப்படவில்லை; ஒரு நாள்கூட மாதாந்திர கூட்டம் நடைபெறவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அனுமதியற்ற கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாநகராட்சி கமிஷனரிடம் அனுமதியற்ற கட்டடங்கள், ஏற்கனவே அளித்த மனுக்கள் குறித்த விவரங்களுடன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டுள்ளோம். நகரமைப்பு பிரிவினர் வாயிலாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரும் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.