/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.6.89 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள்
/
ரூ.6.89 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள்
ADDED : நவ 11, 2025 01:00 AM
கோவை: மாநகராட்சி பகுதிகளில் ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் நேற்று துவங்கப்பட்டன. அதன்படி, கணபதி மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.34.90 லட்சம் மதிப்பீட்டில் உணவுக்கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை, சரவணம்பட்டி, பூந்தோட்டம் நகரில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்காவும் நேற்று திறக்கப்பட்டது.
பீளமேடு, கருப்பண்ணன் லே-அவுட் பகுதியில் பொது நிதியில் இருந்து ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சமுதாயக்கூடம், ஆவாரம்பாளையம் ரோட்டில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் உட்பட ரூ.6.89 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை எம்.பி., ராஜ்குமார் துவக்கிவைத்தார். மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

