/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி வரத்து சரிவு: விலையிலும் மாற்றம்
/
தக்காளி வரத்து சரிவு: விலையிலும் மாற்றம்
ADDED : ஜன 15, 2024 12:19 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு, காய்கறிகளின் வரத்து வழக்கத்தை விட, பத்து சதவீதம் குறைந்து, விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
காய்கறி விலை நிலவரம் குறித்து விவசாயிகள் கூறியதாவது:
இந்த வாரம் தக்காளி வரத்து, பத்து சதவீதம் குறைந்துள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒரு சில காய்களின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 380; கத்தரிக்காய் கிலோ,- 23, முருங்கைகாய் - -130, அவரைக்காய் -- 70, வெண்டைக்காய் - 70, தேங்காய் (ஒன்று) 20, முள்ளங்கி - 35, வெள்ளரிக்காய் - 13, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - - 30, பாகற்காய் - 55, புடலை - 12, பீர்க்கங்காய் - 45, சுரைக்காய் - 12, பச்சைமிளகாய் - 65, பீட்ரூட் - 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதில், வெண்டைக்காய், அவரைக்காய் -- 20, அரசாணிக்காய், பாகற்காய் மற்றும் பச்சைமிளகாய் - 15 ரூபாய் வரை விலை ஏற்றம் அடைந்துள்ளது. கத்தரிக்காய் - 12, முருங்கைக்காய் - 10 ரூபாய் என விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.