/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்திரப்பதிவு 'சர்வர்' முடக்கம்
/
பத்திரப்பதிவு 'சர்வர்' முடக்கம்
ADDED : செப் 30, 2025 12:42 AM
அன்னுார்; அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ், அன்னுார், சூலூர் தாலுகாக்களைச் சேர்ந்த 23க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று காலை முதல் பத்திரப்பதிவுக்கான சர்வர் செயல்படவில்லை. இதுகுறித்து பத்திர எழுத்தர்கள் கூறுகையில், 'நேற்று முன்தினம் சர்வர் செயல்பட்டது.
இதையடுத்து பத்திர பதிவு செய்வதற்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து டோக்கன் பெற்றோம்.
ஆனால் நேற்று காலை முதல் சர்வர் செயல்படவில்லை. இதனால் டோக்கன் பெற்றவர்கள், டோக்கன் பெறாதவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை காத்திருந்தனர்.
எனினும் சர்வர் பிரச்சனை சரியாகவில்லை. நாள் முழுவதும் ஒரு பத்திரம் கூட பதிவாகவில்லை. இதையடுத்து அனைவரும் வெளியேறிச் சென்றனர். சார்பதிவாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
விரைவில் சர்வர் பிரச்சனையை சரி செய்து பத்திர பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.