ADDED : நவ 12, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி ; தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், கோரிக்கை முறையீட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்நோக்கு சங்கங்களாக மாற்றம் செய்து, சங்கத்தின் அடிப்படை பணிகளான கடன் வழங்கும் பணிகளில் தொய்வு ஏற்படுவதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் அனைத்து சங்கங்களும் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் உள்ளது.
இதுபோன்று கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாவட்ட துணைத்தலைவர் நாட்டுதுரை மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்று, கோவையில் மனு கொடுத்ததாக தெரிவித்தனர்.

