/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுத் துறைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை
/
அரசுத் துறைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை
ADDED : ஜன 28, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; அனைத்து அரசுத் துறைகளிலும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, சிலம்பாட்ட கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சின்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய அரசானது ரயில்வே துறை பணியிடங்களில், சிலம்பாட்ட வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில், 10 சதவீதம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல், அனைத்து அரசு துறைகளிலும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

