/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துடியலுார் தாலுகா அலுவலகம் அமைக்க வலுக்கிறது கோரிக்கை
/
துடியலுார் தாலுகா அலுவலகம் அமைக்க வலுக்கிறது கோரிக்கை
துடியலுார் தாலுகா அலுவலகம் அமைக்க வலுக்கிறது கோரிக்கை
துடியலுார் தாலுகா அலுவலகம் அமைக்க வலுக்கிறது கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2025 09:48 PM
பெ.நா.பாளையம்; கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரித்து, துடியலுாரை தலைமை இடமாக கொண்டு தாலுகா அலுவலகத்தை அமைக்க வேண்டும். தற்போது, உள்ள தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் பல கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
கோவை வடக்கு தாலுகாவில் உள்ள கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய வட்டாரங்கள் உள்ளன. இதற்கு, துடியலுார் மையப்பகுதியாக இருப்பதால், அனைத்து பகுதிகளில் இருந்தும் துடியலுாருக்கு சுலபமாக வந்து செல்லலாம்.
பெரியநாயக்கன்பாளையம் பிர்காவில் நாயக்கன்பாளையம், கூடலுார், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, பிளிச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன. துடியலுார் பிர்காவில் எண். 24 வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, சோமையம்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலுார் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன.
வருவாய் துறையின் வசதிக்காக, சட்டம் - ஒழுங்கு பராமரிக்கவும், பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய சான்றிதழ்களைப் பெற, நீண்ட தூரம் அலைவதை தடுக்க, கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரித்து, துடியலுாரில் புதிய தாலுகா அலுவலகத்தை அமைக்க முன்வர வேண்டும்.
மேலும், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்ட சாமநாயக்கன்பாளையம், காளி பாளையம் உள்ளிட்ட பகுதிகளையும், துடியலுார் தாலுகா அலுவலகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.