/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேக்கமடையும் குப்பையை விரைந்து அகற்ற கோரிக்கை
/
தேக்கமடையும் குப்பையை விரைந்து அகற்ற கோரிக்கை
ADDED : அக் 14, 2024 08:22 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், மழை வெள்ளத்தால் அடித்துவரப்பட்டு தேக்கமடையும் குப்பையை, போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரின், பல பகுதிகள் மனை அங்கீகாரம் பெற்று வீடுகள் கட்டப்பட்டாலும், அடிப்படை கட்டமைப்பான மழைநீர் வடிகால் வசதி போதிய அளவில் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான பாதாள சாக்கடை இணைப்பும் முழுமை பெறாததால், தெருவோரங்களில் உள்ள கால்வாய்களில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வீதிகளில் குப்பை கொட்டுவதும் தொடர்கிறது.
இதனால், மழையின்போது, ரோட்டில் செல்லும் வெள்ளத்தில் கழிவுகளும் அடித்து செல்லப்பட்டு, ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. நகராட்சி வாயிலாக உடனுக்குடன் குப்பையை அகற்றவும், சாக்கடை கால்வாய்களை துார்வாரி சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி நகரில், கனமழை நீடித்தால், ஆங்காங்கே கால்வாயில் தேக்கமடைந்து காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், வெள்ளத்துடன் அடித்து சென்று ரோட்டில் பரவி விடுகிறது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தேக்கமடையும் குப்பையை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்,' என்றனர்.

