/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருவிளக்குகள் முறையாக பராமரிக்க கோரிக்கை
/
தெருவிளக்குகள் முறையாக பராமரிக்க கோரிக்கை
ADDED : ஜன 21, 2024 11:53 PM
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி பகுதியில் பள்ளி மற்றும் கல்லுாரிகள், பொது இடங்களில் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கவும், புதியதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகரம் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. ரோடுகள் விரிவாக்கம் செய்தாலும் நெரிசலுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.
இந்நிலையில், பொது இடங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகள் முன்பு தெருவிளக்குகள் இல்லாததால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரதிய கிரக பஞ்சாயத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அகில பாரதிய கிரக பஞ்சாயத் அமைப்பினர் கூறியதாவது:
பொள்ளாச்சி - கோவை ரோடு, பாலக்காடு ரோடு, பழநி ரோடு, வால்பாறை, மீன்கரை மற்றும் பல்லடம் ரோடுகள் உள்ளன. இங்குள்ள சென்டர் மீடியன்களில், தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. ஒரு சில இடங்களில் தெருவிளக்குகள் இல்லை.
இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், இருள் சூழ்ந்த பகுதியில் மது குடித்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன.
மேலும், பள்ளி, கல்லுாரிகள் அருகேயும் தெருவிளக்குகள் இல்லை.
எனவே, அதிகாரிகள், கவனம் செலுத்தி தெருவிளக்குகளை முறையாக பராமரிக்கவும், தேவைப்படும் இடங்களில் புதியதாக தெருவிளக்குகளை அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால், விபத்துகளை கட்டுப்படுத்துவதுடன், சமூக விரோத, குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.