/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுப்பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் தர கோரிக்கை
/
மாற்றுப்பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் தர கோரிக்கை
மாற்றுப்பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் தர கோரிக்கை
மாற்றுப்பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் தர கோரிக்கை
ADDED : ஏப் 01, 2025 10:33 PM
- நமது நிருபர் -
கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விளைச்சலுக்கு ஏற்ற காலநிலை காரணமாக அமோக விளைச்சல் கிடைத்துள்ளது. மித மிஞ்சிய உற்பத்தி காரணமாக வாங்குவதற்கு ஆள் இல்லை.
இதனால், விலை அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. பறிப்பு கூலி, வேன் வாடகைக்கு கூட கட்டுபடி ஆகாததால் பல விவசாயிகள் தக்காளிச் செடிகளை உழவு ஓட்டி அழித்து வருகின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வாக உள்ளது. கார்த்திகைப் பட்டத்தில் வழக்கமாக தக்காளி சாகுபடி அதிகரிக்கும் என்பதால் மாற்று பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இப்பிரச்னை ஏற்படாது.
பருப்பு, எண்ணெய் வித்துக்கள் போன்றவை பெரும்பாலும் இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் சாகுபடி செய்யாததற்கு காரணம் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதே காரணம்.
இவற்றை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கினால் எண்ணெய் வித்து, பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரித்து காய்கறி சாகுபடி பரப்பு குறையும். விவசாயிகளும் விலை சரிவிலிருந்து தப்ப முடியும். அன்னிய செலாவணியும் மிச்சமாகும். அது அரசின் கைகளில் தான் உள்ளது.

