/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒற்றுமை பொங்கல் விழா
/
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒற்றுமை பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தண்ணீர் பந்தல், நேருவீதி, இடிகரை, கீரணத்தம், அம்பேத்கர் நகர், கண்ணப்பநகர், கணபதிபுதுார், கெம்பட்டி காலனி, ஜனநாயுடு வீதி, நடுப்பாளையம் ஆகிய பகுதிகளில், பொங்கல் விழாவை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் நடந்தன.
அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.