/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நஞ்சுண்டாபுரம் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
/
நஞ்சுண்டாபுரம் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
நஞ்சுண்டாபுரம் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
நஞ்சுண்டாபுரம் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
ADDED : செப் 28, 2024 05:07 AM

கோவை: உக்கடம் பெரிய குளம் அருகே நஞ்சுண்டாபுரம் ராஜவாயக்கால் கரையை ஆக்கிரமித்து, கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் நேற்று இடிக்கப்பட்டன.
உக்கடம் பெரிய குளம், 320 ஏக்கர் பரப்பு கொண்டது; 1,425 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இக்குளத்தின் தென்கிழக்கு மதகில் தண்ணீர் திருப்பினால், கரும்புக்கடை வழியாக, நஞ்சுண்டாபுரத்தில் இணையும் வகையில், பாசன வாய்க்கால் இருந்தது. இந்த வாய்க்கால் புதர்மண்டி இருப்பதோடு, ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கிறது.
இந்த நீர் வழித்தடத்தை மீட்டு, பாசனத்துக்கு தண்ணீர் வழங்க, உக்கடம் பெரிய குளம் பாசன மற்றும் கிராம விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் வழித்தடத்தை மீட்க, நகரமைப்பு பிரிவினருக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
இதன்படி, நேற்று ராஜவாய்க்கால் கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. முதல்கட்டமாக, ஒரு கி.மீ., துாரத்துக்கு இருந்த, 15 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இரண்டு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன. வீடு கட்டியிருப்பவர்கள், ராஜவாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கூடுதல் கட்டடம் கட்டியிருந்தனர். அவற்றின் ஒரு பகுதியை இடித்து அகற்றினர்.
நேற்று ஒரு கி.மீ., துாரத்துக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் இன்று (செப்., 28) அகற்ற இருப்பதாக, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.