/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்ணபிரான் மில் ரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
/
கண்ணபிரான் மில் ரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
கண்ணபிரான் மில் ரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
கண்ணபிரான் மில் ரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
ADDED : ஜூலை 16, 2025 11:05 PM

கோவை; நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, கோவை கண்ணபிரான் மில்ஸ் ரோட்டில், ஏழு ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று இடிக்கப்பட்டன.
கோவை மாநகராட்சி, 50வது வார்டு, உடையாம்பாளையம் கண்ணபிரான் மில்ஸ் அருகே ராமலிங்கபுரத்தில், 40 அடி ரோட்டை ஆக்கிரமித்து, வரிசையாக ஓட்டு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. சிலர் கடைகள், மெஸ் நடத்தி வந்தனர்; அப்பகுதியில், ஒரு கோவிலும் கட்டப்பட்டு இருக்கிறது.
சாலையோரத்தை ஆக்கிரமித்து ஓட்டு வீடுகளில் வசிப்போருக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்று வீடு வழங்கப்பட்டது. சிலர் உடனடியாக ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்தனர்; சிலர் காலி செய்யாமல் இருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றினால், 40 அடிக்கு ரோடு வசதி கிடைக்கும். இதுதொடர்பாக, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டதும், முதல்கட்டமாக, 13 வீடுகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இடித்து அகற்றினர்.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் வசித்ததால், அவர்களது கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, ஏப்., வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகத் துவங்கியது தொடர்பாக, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர், அப்பகுதியில் உள்ள ஏழு வீடுகளை, நேற்று இடித்து அகற்றினர்.
ஐந்து வீடுகளுக்கு இன்னும் மாற்று இடமாக பட்டா வழங்காததால், அவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். அதனால், அவ்வீடுகள் மட்டும் இடிக்கப்படவில்லை. இனி, வருவாய்த்துறையினர் பட்டா வழங்கிய பிறகே இடிக்க முடியுமென, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

