/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய குடியிருப்புகள் இடிக்கும் பணி துவக்கம்
/
பழைய குடியிருப்புகள் இடிக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 20, 2025 10:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள, பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணி துவங்கியுள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகம், வேளாண், சமூக நலத்துறை அலுவலங்கள், இ - சேவை மையம், ஒன்றிய அலுவலகம் போன்றவை உள்ளது.
இந்த வளாகத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்து காணப்பட்டது.
தற்போது, அதிக சேதமடைந்துள்ள நான்கு கட்டடங்களை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்த பின், புதிய கட்டடம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.