UPDATED : அக் 21, 2026 04:50 PM
ADDED : அக் 21, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம்(சி.ஐ.டி.யு.) சார்பில், பாரதிபார்க் ரோட்டில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை வகித்த மாவட்ட தலைவர் பிரான்சிஸ், ‘‘மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு ரூ.9,000, ரூ.8,500, ரூ.10,000 மற்றும் ரூ.11,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இம்மாதம் முதல் ரூ.13,053 வழங்க வேண்டும். அதோடு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்’’ என பேசினார்.
