UPDATED : அக் 21, 2026 04:40 PM
ADDED : அக் 21, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
நஞ்சுண்டாபுரம்: போத்தனூர் நஞ்சுண்டாபுரம் மேற்கு தேவேந்திர வீதியை சேர்ந்தவர் பிலிப், 42; மனைவி லதாமேரி, 39.
மதுப்பழக்கம் உடைய பிலிப், போதையில் மனைவி, மகள்களை தரக்குறைவாக பேசி, திட்டுவது வழக்கம். 18ம் தேதி இரவு போதையில் வீட்டுக்கு வந்த பிலிப் வழக்கம் போல திட்டியுள்ளார். இதுகுறித்து கேட்ட லதாமேரியை இரும்பு ராடால் தலையில் தாக்க முயன்றார். தடுத்த லதாமேரியின் இடது கை எலும்பு முறிந்தது. பிலிப் மனைவியை எச்சரித்துவிட்டு, வெளியே சென்றார். மருத்துவமனையில் சேர்ந்த லதாமேரி புகாரில், போத்தனூர் போலீசார் பிலிப்பை கைது செய்தனர்.
