தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டெங்குவை விரட்டி அதிரடி கிழக்கு மண்டலம் சரவெடி!

டெங்குவை விரட்டி அதிரடி கிழக்கு மண்டலம் சரவெடி!

டெங்குவை விரட்டி அதிரடி கிழக்கு மண்டலம் சரவெடி!


UPDATED : நவ 06, 2026 07:37 PM

ADDED : நவ 06, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:37 PM ADDED : நவ 06, 2026 06:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: சென்னை, கோவை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்தது. டெங்கு பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கிறது. டெங்கு கொசு உற்பத்தியாகும் பொருட்களை சேகரிக்க, 5 மண்டலங்களுக்கு இடையே “அதிரடி சரவெடி” என்ற பெயரில் தூய்மை பணி போட்டி நடந்தது.

அக்டோபர் 23ம் தேதி துவங்கி கடந்த 4ம் தேதி வரை நடைபெற்றது. டயர், டப்பா, தேங்காய் சிரட்டை, உடைந்த ஜாடி, பாட்டில்கள், உணவு பார்சல் கன்டைனர் பறிமுதல் செய்யப்பட்டன.

5 மண்டலங்கள் இணைந்து 28,78,563 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு மண்டலம் 8,42,032 பொருட்களை பறிமுதல் செய்து முதல் இடம் பிடித்தது. அவர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி பரிசாக வழங்கப்பட்டது.

7,94,779 பொருட்களுடன் மத்திய மண்டலம் இரண்டாம் இடம் (ரூ.5,000 பட்டாசு பெட்டி பரிசு), 5,21,198 பொருட்களுடன் வடக்கு மண்டலம் மூன்றாம் இடம் (ரூ.3,000 பட்டாசு பெட்டி பரிசு) பிடித்தது.

கிழக்கு மண்டலம் 3,90,239 பொருட்கள், தெற்கு மண்டலம் 3,30,315 பொருட்களுடன் அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு அமைச்சர் சம்பத்குமார் பரிசு வழங்கினார்.

5 பெண்களுக்கு


பட்டுப்புடவை
வி.வி.எம்.மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதிர்ஷ்ட பெட்டியில் கூப்பன் செலுத்தியவர்களுக்கு, குலுக்கல் முறையில் 5 பெண்களுக்கு பட்டு புடவை பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்கள் 1,822 பேருக்கு சீருடை தொகுப்பையும் சம்பத்குமார் வழங்கினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us