/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
/
காரமடையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
ADDED : ஆக 03, 2025 09:19 PM

மேட்டுப்பாளையம்; காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வின்போது தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால், அபேட் மருந்து ஊற்றுகின்றனர். மேலும், டயர், தேங்காய், மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்த வலியுறுத்துகின்றனர்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தால், அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தால், அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தால் அதனை கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.