/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ காப்பீடு தொகை தர மறுப்பு; இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு
/
மருத்துவ காப்பீடு தொகை தர மறுப்பு; இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு
மருத்துவ காப்பீடு தொகை தர மறுப்பு; இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு
மருத்துவ காப்பீடு தொகை தர மறுப்பு; இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு
ADDED : ஜன 25, 2024 06:38 AM
கோவை : மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான காப்பீடு தொகை திருப்பித்தர, இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்ததால், இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, டாடாபாத், நுாறடி ரோட்டை சேர்ந்த ஜீவேந்திரா, ஆர்.எஸ்.புரத்திலுள்ள 'கேர் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனத்தில், 2018, நவ., 18ல், மருத்துவ காப்பீடு செய்தார். அதற்கு ஒரு முறை பிரீமியமாக, 33,200 ரூபாய் செலுத்தி, பாலிசியை தவறாமல் புதுப்பித்தும் வந்தார்.
இதற்கிடையில், ஜீவேந்திராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 2022, ஏப்ரலில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகை வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், மருத்துவ காப்பீடு பாலிசி எடுப்பதற்கு முன்பே, மனுதாரருக்கு நுரையீரல் வீக்கம் மற்றும் இருதய கோளாறு பிரச்னை இருந்ததாகவும், அதை மறைத்து மருத்துவ காப்பீடு செய்துள்ளதாகவும் கூறி, விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
காப்பீடு செய்வதற்கு முன்பு, நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவ சான்றிதழ் கொடுத்தும், 'கிளைம்' தொகை வழங்க மறுத்தனர். இதனால் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜீவேந்திரா வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'மனுதாரருக்கு முன்நோய் இல்லை என்று மருத்துவர் சான்று அளித்துள்ளார். எனவே மருத்துவ செலவு தொகை, 37,499 ரூபாய், சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.