ADDED : பிப் 10, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மாநகர புதிய வடக்கு துணை கமிஷனராக, ரோகித் நாதன் ராஜகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகர வடக்கு துணை கமிஷனராக சந்தீஸ் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த, 7ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக, சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ரோகித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, மாநகர வடக்கு துணை கமிஷனராக, பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அவருக்கு போலீசார் சார்பில், அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.