UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 10:58 PM

திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள தேவராயன் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில், விரிவுபடுத்தப்பட்ட வகுப்பறை அறிமுக விழா நடந்தது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரில் அமைந்துள்ள தேவராயன் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில், உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் மேம்படுத்தும் நோக்கில், புதுமையான வடிவமைப்புடன் கூடிய, விரிவுபடுத்தப்பட்ட வகுப்பறை அறிமுக விழா நடந்தது.
குழந்தைகளின் கற்பனைத்திறனை துாண்டும் வகையில், மகிழ்ச்சியான சூழலில் கல்வி கற்கும் வகையிலும், இந்த வகுப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் ஆறுமுகம், செயலாளர் பிரசன்ன அங்குராஜ், பள்ளி முதல்வர் ஆகியோர் பங்கேற்று புதிய வகுப்பறையை அறிமுகப்படுத்தினர். குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கும், தரமான கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் தேவராயன் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸின் மற்றுமொரு சிறப்பு முயற்சியாக, இந்த நிகழ்ச்சி அமைந்ததாக, பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.
