தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மொபைல் போனை ஹேக் செய்து நுாதன மோசடி

மொபைல் போனை ஹேக் செய்து நுாதன மோசடி

மொபைல் போனை ஹேக் செய்து நுாதன மோசடி


UPDATED : நவ 22, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை, பன்னிமடை விநாயகா கார்டன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்,37; சாப்ட்வேர் இன்ஜினீயர். இவருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.,ல், போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

அந்த தகவலை ஓபன் செய்தவுடன் அவரது போன் ஹேக் செய்யப்பட்டது. அவரது ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிரெடிட் கார்டு வங்கி கணக்கிலிருந்து 1.50 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரிந்தது.

* கணுவாய், தடாகம் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமணன்,29. இவர், எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்தார். வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து அழைப்பதாக பேசிய மர்ம நபர், கடன் அட்டை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறி, செயலி ஒன்றை அனுப்பினார். அதை லட்சுமணன் ஓபன் செய்தவுடன் அவரது போன் ேஹக் செய்யப்பட்டது.

அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி, 2.38 லட்சம் ரூபாய் எடுத்து மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாகஇருவரும் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us