/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிட்டாம்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
/
கிட்டாம்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
கிட்டாம்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
கிட்டாம்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : பிப் 09, 2024 11:08 PM

கருமத்தம்பட்டி;கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சியில், தார் ரோடு போடவும், வினோபாஜி நகரில் கான்கிரீட் தெரு அமைக்கவும், 1.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நிர்வாக அனுமதி பெறப்பட்டது.
முத்து நகரில் நடந்த பூமி பூஜை விழாவில், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். தானியங்கி கேட் வால்வ் வாயிலாக குடிநீர் வினியோகித்தல், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
ஊராட்சி தலைவர் சந்திரசேகர், பி.டி.ஓ., முத்துராஜ், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முருகேசன், வடக்கு மாவட்ட காங்., கட்சி தலைவர் மனோகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.