ADDED : ஜன 07, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி; விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர், பணப்பாக்கத்தை சேர்ந்த 50 பேர், குழுவாக, சபரிமலைக்கு மாலையணிந்து, சபரிமலைக்கு செல்லும் வழியில், கோவை மருதமலைக்கு நேற்று அதிகாலை வந்துள்ளனர்.
இக்குழுவினர், நேற்று காலை படிக்கட்டு பாதை வழியாக, மலைமேல் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி அருகே செல்லும்போது, இக்குழுவில் வந்த மணிகண்டன், 46 என்பவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.
அருகிலிருந்தவர்கள் உடனடியாக, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்தபோது, மணிகண்டன் உயிரிழந்தது தெரியவந்தது. வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

