/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பக்தி நுால்கள் விற்பனைக்கு 100 கோவில்களில் கடை
/
பக்தி நுால்கள் விற்பனைக்கு 100 கோவில்களில் கடை
ADDED : ஏப் 05, 2025 01:28 AM
சென்னை:ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய பக்தி நுால்கள் விற்பனைக்காக, கூடுதலாக 100 கோவில்களில், புத்தக விற்பனை நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பக்தி இலக்கியங்கள், தல புராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறு, கோவில் கலை நுால்கள், சிலை நுால்கள், காவிய நுால்கள், ஓவிய நுால்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடி கள், இறையடியார்களின் பொன்மொழிகள் என, அரிய பக்தி நுால்கள், புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை இரண்டு கட்டங்களாக, 216 பக்தி நுால்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், 103 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்கள், துறை கமிஷனர் அலுவலகத்தில், ஒரு நிலையம் துவக்கப்பட்டு, நுால்கள் விற்கப்படுகின்றன.
மேலும், 100 கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.
அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் முருகானந்தம், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.

