தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடற்புழு நீக்க முகாம்

குடற்புழு நீக்க முகாம்

குடற்புழு நீக்க முகாம்


UPDATED : ஆக 09, 2026 07:45 PM

ADDED : ஆக 09, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 07:45 PM ADDED : ஆக 09, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்கள், 985 தனியார் பள்ளிகள், 1,070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 150 கல்லுாரிகள், 90 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 530 துணை சுகாதார நிலையங்கள் மூலம் 'அல்பெண்டசோல்' எனும் குடற்புழு நீக்க மாத்திரை, (ஆகஸ்ட்10) இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒன்று முதல் 19 வயதுக்குட்பட்ட 9.70 லட்சம் குழந்தைகள், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து 2.53 லட்சம் பெண்கள் என மொத்தம் 12.24 லட்சம் பயனாளிகளுக்கு, இம்மாத்திரை வழங்கப்படவுள்ளது.

முகாமில் மாத்திரை உட்கொள்ளத் தவறிய குழந்தைகளுக்கு, ஆக.,17ம் தேதி மீண்டும் வழங்கப்படும் என, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us