/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்: மாணவர்களுக்கு வினியோகம்
/
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்: மாணவர்களுக்கு வினியோகம்
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்: மாணவர்களுக்கு வினியோகம்
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்: மாணவர்களுக்கு வினியோகம்
ADDED : பிப் 11, 2025 11:34 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது.
தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில், 1 முதல், 19 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும், 20 முதல், 30வயது பெண்களுக்கும் இலவசமாக குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்படாது.
இதற்காக அங்கன்வாடி மையங்கள், அரசு தனியார் பள்ளிகள், கல்லுாரிகளின் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி நகராட்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், முகாம்கள் நடைபெற்றன.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நகரப்பகுதியில் ஒன்று முதல், 19 வயது வரை, 23,055, 20 முதல், 30 வயதுடைய பெண்கள், 4,040 பேர், தெற்கு ஒன்றியத்தில், 1முதல், 19வயது வரை, 24,952, 20 - 30 வயதுடைய பெண்கள், 10,486, வடக்கில், 1 - 19 வயது, 23,728, 20 - 30 வயது வரை, 9,350 பேர், கிணத்துக்கடவு, 33,161, ஆனைமலை, 48,482 பேர் என மொத்தம், ஒரு லட்சத்து, 77,254 பேர் வழங்க போதுமான மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தெற்கு ஒன்றியத்தில், 1 - 19 வயதினருக்கு, 23,745 பேருக்கும்; 20 - 30 பேரில், 8948 பேர் என மொத்தம், 32,693 பேருக்கு வழங்கப்பட்டது.நகராட்சியில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.வடக்கு ஒன்றியத்தில், 1- 19 வயது பிரிவில், 23,056, 20 - 30 வயது பிரிவில், 8736 பேர் என மொத்தம், 31,792 பேருக்கு வழங்கப்பட்டது.
இதுபோன்று, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் வழங்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
உடுமலை
தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் தங்கவேல் மாணவர்களுக்கு குடற்புழு நீக்கம் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து மாணவர்கள் குடற்புழு நீக்கம் குறித்து, உறுதிமொழி எடுத்தனர்.

