/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
/
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
ADDED : ஆக 10, 2025 10:44 PM
சூலுார், ; அனைத்து வட்டாரங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் இன்று நடக்கிறது.
தேசிய குடற்புழு நீக்க தினத்தை ஒட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், பள்ளிகள், கல்லுாரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
குடற்புழுக்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. குடற்புழுக்களை நீக்க, மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம், ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை உள்ளிட்ட பிரச்னைகளை தடுக்க முடியும், என, சுகாதாரத்துறையினர் கூறினர்.