/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவிலில் தன்வந்திரி சிலை பிரதிஷ்டை
/
பெருமாள் கோவிலில் தன்வந்திரி சிலை பிரதிஷ்டை
ADDED : ஜன 12, 2026 06:48 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் தன்வந்திரி பகவான் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பொள்ளாச்சி கடைவீதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், நன்கொடையாளர் பலராமன் பங்களிப்புடன், தன்வந்திரி பெருமாள் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நேற்றுமுன்தினம் நவகலச ஸ்தாபனம், தான்யாவதி வாசம், ஜனாதி, சைனாதிவாசம் நடந்தது. அதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை கோபூஜையுடன் துவங்கி தன்வந்திரி ேஹாமம், பஞ்ச சுத்த ேஹாமம், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 10 வகையான திரவியங்களை கொண்டு அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், சுவாமி கண் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் தன்வந்திரி பகவான், கோவில் வளாகத்தில் உலா வந்தார். அறங்காவலர் குழுதலைவர் மணிகண்டன், அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

