sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இளநீர் பண்ணை விலை 26 ரூபாயாக நிர்ணயம்

/

 இளநீர் பண்ணை விலை 26 ரூபாயாக நிர்ணயம்

 இளநீர் பண்ணை விலை 26 ரூபாயாக நிர்ணயம்

 இளநீர் பண்ணை விலை 26 ரூபாயாக நிர்ணயம்


ADDED : ஜன 12, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 12, 2026 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வாரத்தை விட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வாரத்தை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 26 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 11,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களை ஒப்பிடுகையில், இளநீர்வரத்து கணிசமாக குறைவாக உள்ளது. மத்துார் சந்தையில் இந்த வாரம் தரமான ஒரு இளநீர், 33 ரூபாய் வரை விற்பனையாகிறது.

மத்துார், தாளவாடி பகுதிகளிலும் இளநீர் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பின் இளநீரின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us