/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பகத்தில் களைகட்டிய 'துருவா 25' கலைவிழா
/
கற்பகத்தில் களைகட்டிய 'துருவா 25' கலைவிழா
ADDED : மார் 18, 2025 11:25 PM

கோவை; ஈச்சனாரி, கற்பகம் பொறியியல் கல்லுாரியில், 'துருவா 25' என்ற, தேசிய அளவிலான தொழில்நுட்ப,விளையாட்டு மற்றும் கலாசார விழா மூன்று நாட்கள் நடந்தது.
இதில், நுாறுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த தொழில்நுட்ப போட்டிகள், பத்துக்கும் மேம்பட்ட விளையாட்டுப் போட்டிகள், 54 கருத்தரங்குகள், 25 கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
180க்கும் மேற்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்த, ஆறாயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பல்துறை போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று, பரிசுகளை வென்றனர். ஒவ்வொரு நாள் மாலையும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகள் நடந்தன.
மை கேம்பஸ் கிளப்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கவுரிசங்கர் விழாவை ஒருங்கிணத்தார். கற்பகம் பொறியியல் கல்லுாரியின் முதல்வர் குமார், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.