/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கரை நோயும் மன அழுத்தமும் ஜி.ஆர்.என்., சிகிச்சையில் நலம்
/
சர்க்கரை நோயும் மன அழுத்தமும் ஜி.ஆர்.என்., சிகிச்சையில் நலம்
சர்க்கரை நோயும் மன அழுத்தமும் ஜி.ஆர்.என்., சிகிச்சையில் நலம்
சர்க்கரை நோயும் மன அழுத்தமும் ஜி.ஆர்.என்., சிகிச்சையில் நலம்
ADDED : ஜூன் 30, 2025 11:01 PM

சர்க்கரை நோயும் மன அழுத்தமும் எவ்வாறு தொடர்புடையது என்பதை பற்றி, ஜி.ஆர்.என்., டயபட்டிக் சென்டர் டாக்டர் கோகுலரமணன் கூறியதாவது:
மனஅழுத்தம் மட்டுமே சர்க்கரை நோயை உண்டாக்காது. மன அழுத்தத்தின்போது, மனஅழுத்த ஹார்மோன், கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின் அதிகமாக சுரக்கின்றது. இந்த ஹார்மோன்கள், கல்லீரலை துாண்டி, ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது.
சர்க்கரை நோய்க்கான தொடர் சிகிச்சை, சிகிச்சையின் செலவு, மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லுதல், சர்க்கரை நோயினால் ஏற்படும் இணை நோயினால் மன உளைச்சலைத் தரும்.
சர்க்கரை நோயாளிகள் மனஅழுத்தத்தை குறைக்க யோகா, தியானம், இசை கேட்பது, குடும்பத்தினர், மற்றும் நண்பர்களுடன் பேசுவது, மனசுமையை குறைத்து உணர்வுபூர்வமான தன்னம்பிக்கை பெற உதவுகிறோம். மொத்தத்தில், சர்க்கரை நோய்க்கு சிறந்த சிகிச்சை அளிப்பதில், கோவையில் நம்பகமானவர்களாக உள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் விபரங்களுக்கு, நியூ சித்தாபுதுார், வி.கே.கே., மேனன் ரோட்டிலுள்ள ஜி.என்.ஆர்., டயபட்டிக் மையத்தை அணுகலாம். 90876 44003, 0422 - 252 2138 என்ற எண்ணில் அழைக்கலாம்.