மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்: 35 பேருக்கு கண் பரிசோதனை
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்: 35 பேருக்கு கண் பரிசோதனை
UPDATED : நவ 04, 2026 10:41 AM
ADDED : நவ 04, 2026 10:36 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 418 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில், பொள்ளாச்சி தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., நித்தியானந்தன் தலைமை வகித்து, முகாமினை துவக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கணேஷ்ராம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, வட்டார மருத்துவ அலுவலர் சந்தான குமார் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி மற்றும், 21 துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு முகாமில், மொத்தம், 418 மனுக்கள் பெறப்பட்டன. அதில், உதவித்தொகை, உபகரணங்கள் வழங்க கோரி, 210 மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ், 20 பேருக்கு புதியதாகவும், 16 பேருக்கு புதுப்பித்தும் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை, 55 பேருக்கு புதியதாக பதிவு செய்யப்பட்டன. தவறுகள் சரி செய்து, 35 பேருக்கு பதிவு செய்யப்பட்டன. நலவாரியத்தில், 54 பேர் பதிவு செய்யப்பட்டனர். 15 பேர் வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பித்தனர். ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது.
ஒன்பது பேருக்கு செயற்கை கால் அளவு எடுக்கப்பட்டது. ஆறு பேருக்கு வீல் சேர் வழங்கப்பட்டது. 33 பேருக்கு ஆதார் அட்டையில் மொபைல்போன் எண் இணைக்கப்பட்டது. இரண்டு பேருக்கு புதியதாக ஆதார் எடுக்கப்பட்டது. பொது மருத்துவ முகாமில், 56 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். 35 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
