மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி திறமை வெளிப்படுத்திய வீரர்கள்
மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி திறமை வெளிப்படுத்திய வீரர்கள்
UPDATED : நவ 04, 2026 10:41 AM
ADDED : நவ 04, 2026 10:36 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், 36வது மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே ஸ்கேட்டிங் மைதானத்தில், 36வது மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடக்கிறது. தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் பிரதாப்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜிசுந்தரம், மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் சந்திரசேகர், பொள்ளாச்சி தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இன்லைன் ஸ்பீடு, ஸ்குவாடு என்ற பிரிவுகளில் கடந்த, 1ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது. அதில், 4 – 6, 6 – 8, 8 – 10, 10 – 12, 12 – 14, 14 – 16 வயது மற்றும், 16வயதுக்கு மேல் என, ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. இதில், 32 மாவட்டங்களை சேர்ந்த, 2,160 பேர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
தினமும், கால் இறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் நடத்தப்பட்டு மெடல்கள் வழங்கப்படுகிறது. இதுவரை, 70 மெடல்கள் வழங்கப்பட்டதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
போட்டிகள் வரும், 6ம் தேதி வரை நடத்தப்படுகிறது. வெளியூர்களில் இருந்து மாணவர்களை பெற்றோர் ஆர்வமாக அழைத்து வந்துள்ளனர்.
