/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களின் விடுப்பு விபரம் உறுதிசெய்ய முடியாமல் திணறல்
/
பள்ளி மாணவர்களின் விடுப்பு விபரம் உறுதிசெய்ய முடியாமல் திணறல்
பள்ளி மாணவர்களின் விடுப்பு விபரம் உறுதிசெய்ய முடியாமல் திணறல்
பள்ளி மாணவர்களின் விடுப்பு விபரம் உறுதிசெய்ய முடியாமல் திணறல்
ADDED : அக் 17, 2024 10:22 PM
பொள்ளாச்சி : அரசு பள்ளிகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்தால், அந்த விபரம் பெற்றோரின் மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் 'எமிஸ்' இணையதளம் வாயிலாக, பல்வேறு திட்டங்கள், செயல்முறைகள் பயன்பாட்டில் உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களும் 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
எப்போது வேண்டுமென்றாலும் தேவைப்படும் தகவல்களை, இதன் வாயிலாக பெறவும் முடிகிறது. அவ்வகையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பதிவு, 'எமிஸ்' தளம் மற்றும் டி.என்.எஸ்.இ.டி., மொபைல்ஆப் வாயிலாகவும் பதிவு செய்யப்படுகிறது.
அதன்படி, பள்ளிக்கு வராத மாணவர்களின் விபரம், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மொபைல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., சென்றடைகிறது. ஆனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்கள் விடுப்பு எடுத்தால், அந்த விபரம் சில நேரங்களில், சரிவர பெற்றோர்களைச் சென்றடைவதில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது, சில நேரங்களில் பெற்றோருக்கு கூட தெரியாமல் இருக்கலாம். இதுபோன்ற மாணவர்களின் நிலையை பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.
'எமிஸ்' தளத்தில் மாணவர்களின் வருகை 'அப்டேட்' செய்யப்படும்போது, 'ஆப்சென்ட்' விபரம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெற்றோரின் மொபைல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., சென்றடையும் வகையில் சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான நேரங்களில் எஸ்.எம்.எஸ்., சென்றடைவதில்லை. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, கூறினர்.