/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
/
மகளிர் தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
மகளிர் தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
மகளிர் தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
ADDED : பிப் 16, 2024 02:00 AM
கோவை;எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு உதவி மையம் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு சங்கம் (டபிள்யூ.ஓ.பி.இ.டி.ஏ.,) சார்பில் மகளிருக்கான ஐந்து நாள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி நேற்று துவங்கியது. மத்திய அரசின் அட்டல் இன்குபேசன் மைய அதிகாரி அருள்செல்வன் பங்கேற்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் அவசியம் குறித்து பேசினார்.
ஐந்து நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில், வல்லுநர்கள் ஜி.எஸ்.டி., பதிவு, சோசியல் மீடியா மார்க்கெட்டிங், வெப் அனலிடிக்ஸ், நியூரோ மார்க்கெட்டிங், எஸ்.இ.ஓ., எஸ்.இ.எம்., பிராண்டிங் உள்ளிடட் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. முற்றிலும் இப்பயிற்சிகள் இலவசமாக மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்காக அளிக்கப்படுகிறது.
துவக்கவிழாவில், எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு உதவி மையம் உதவி இயக்குனர்கள் பிரபு, கயல்விழி, சபரிகிரி, மற்றும் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு சங்க தலைவர் சுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.