/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' வினாடி- வினா போட்டி; அசத்திய மாநகராட்சி பள்ளி மாணவியர்
/
'தினமலர் - பட்டம்' வினாடி- வினா போட்டி; அசத்திய மாநகராட்சி பள்ளி மாணவியர்
'தினமலர் - பட்டம்' வினாடி- வினா போட்டி; அசத்திய மாநகராட்சி பள்ளி மாணவியர்
'தினமலர் - பட்டம்' வினாடி- வினா போட்டி; அசத்திய மாநகராட்சி பள்ளி மாணவியர்
ADDED : ஜன 03, 2025 11:55 PM

கோவை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் மாநகராட்சி பள்ளி மாணவியர் பதில் அளித்து அசத்தினர்.
பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.
இதை வாசிக்கும் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும் கடந்த, 2018 முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.
இதுவரை, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள், 65 மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்படுகிறது. மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து இப்போட்டி நடத்தப்படுகிறது.
பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
வடகோவை, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த, தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை, 100 பேர் எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'எச்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஸ்வேதா, 9ம் வகுப்பு மாணவி ஜீவிதா பாரதி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, தலைமையாசிரியை புனிதா பரிசுகள் வழங்கினார். அறிவியல் ஆசிரியை அனிதா, கணித ஆசிரியை பாத்திமா, வணிகவியல் ஆசிரியர் ஹரிஹரன் ஆகியோர் உடனிருந்தனர்.

