ADDED : ஆக 25, 2011 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பி.டி.ஓ., மாற்றப்பட்டு புதிய
பி.டி.ஓ., பொறுப்பேற்றார்.தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.,
மாதம் நடக்கவுள்ளதையடுத்து, ஒன்றியம் வாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
(பி.டி.ஓ.,) மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.பொள்ளாச்சி வட்டார வளர்ச்சி
அலுவலராக (ஊராட்சிகள்) இருந்த பழனிசாமி, ஆனைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி
அலுவலராகவும், ஆனைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த அம்பிகா,
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட பி.டி.ஓ.,க்கள் அந்தந்த
ஒன்றியங்களில் பொறுப்பேற்றனர்.