sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காட்டுயானைகள் குட்டிகளுடன் உலா

/

காட்டுயானைகள் குட்டிகளுடன் உலா

காட்டுயானைகள் குட்டிகளுடன் உலா

காட்டுயானைகள் குட்டிகளுடன் உலா


ADDED : செப் 18, 2011 10:16 PM

Google News

ADDED : செப் 18, 2011 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் மழை பொழிவால் பசுமை வனமாக மாறியுள்ளதால், காட்டுயானைகள் 'ஜாலி வாக்' வந்து நீர்நிலைகளில் தண்ணீர் குடித்து செல்கின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பிலும், பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் 285 சதுர கிலோமீட்டர் பரப்பிலும் அமைந்துள்ளன. புலிகள் காப்பகத்தில் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, சோலையாறு உள்ளிட்ட அணைகளும், வனத்தினுள் நூற்றுக்கணக்கான தடுப்பணைகளும் அமைந்துள்ளன. தென்மேற்கு மழையால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இரு வனப்பகுதியிலும் சேர்த்து 900க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. காட்டு யானைகள் குட்டிகளுடன் நீர்நிலைகளுக்கு 'ஜாலி வாக்' வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. டாப்சிலிப்பில் இருந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் தூணக்கடவு அணையில் காட்டுயானைகள் கும்பலாக வந்து தண்ணீர் குடித்தன. தாய் யானை அங்கிருந்த மரக்கிளைகளை உடைத்து குட்டி யானைகளுக்கு உணவாக கொடுத்தது. அதன்பின், காட்டுயானைகள் தும்பிக்கையை பிடித்து இழுத்து விளையாடின. பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் காட்டு யானைகளின் விளையாட்டை கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us