/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.சி., வார்டுக்கு பொது பிரிவு வேட்பாளர் சென்னைக்கு புறப்பட்ட அ.தி.மு.க.,வினர்
/
எஸ்.சி., வார்டுக்கு பொது பிரிவு வேட்பாளர் சென்னைக்கு புறப்பட்ட அ.தி.மு.க.,வினர்
எஸ்.சி., வார்டுக்கு பொது பிரிவு வேட்பாளர் சென்னைக்கு புறப்பட்ட அ.தி.மு.க.,வினர்
எஸ்.சி., வார்டுக்கு பொது பிரிவு வேட்பாளர் சென்னைக்கு புறப்பட்ட அ.தி.மு.க.,வினர்
ADDED : செப் 23, 2011 09:44 PM
அன்னூர் : அ.தி.மு.க., வில் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட
இருவருக்கு சீட் வழங்கப்பட்டடுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.
எஸ்.சி.,
வார்டில் போட்டியிட பொதுப்பிரிவை சேர்ந்தவர் அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை
மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் அ.தி.மு.க., வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் எஸ்.சி.,க்கு ஒதுக்கப்பட்ட 31வது வார்டுக்கு
பொதுப்பிரிவைச் சேர்ந்த வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை
மாநகராட்சி விரிவாக்கத்தில் சரவணம்பட்டி, காளப்பட்டி உள்ளிட்ட ஏழு
பேரூராட்சிகளும், விளாங்குறிச்சி ஊராட்சியும் சேர்க்கப்பட்டு விட்டன.
சரவணம்பட்டி பகுதி, மாநகராட்சியின் 31வது வார்டாக அறிவிக்கப்பட்டு,
ஆதிதிராவிடருக்கு (எஸ்.சி.,) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுக்கு
பொதுப்பிரிவை சேர்ந்த சரவணம்பட்டி அ.தி.மு.க., நகரச் செயலர் சவுந்தரராஜன்
அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சீட் வழங்கப்பட்டும், அந்த வார்டு
எஸ்.சி.,க்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியிட முடியாத நிலையில் உள்ளார். இது
குறித்து சவுந்தரராஜன் கூறுகையில்,''என்னுடைய வார்டில் எஸ்.சி., வேட்பாளர்
மட்டும் போட்டியிட முடியும் என்பதால், வேறு வார்டு ஒதுக்கித்தரும்படி
தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அருகில் உள்ள 28 அல்லது 30வது
வார்டுகளில் ஏதாவது ஒன்றில் வாய்ப்புத் தரும்படி கோரியுள்ளேன்,'' என்றார்.
இந்நிலையில், சீட் கிடைக்காத கட்சி நிர்வாகிகள் பலர் தங்களது
ஆதரவாளர்களுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.