/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
186 பதவிக்கு 828 பேர் வேட்பு மனு தாக்கல்
/
186 பதவிக்கு 828 பேர் வேட்பு மனு தாக்கல்
ADDED : செப் 29, 2011 10:06 PM
பொங்கலூர் : பொங்கலூர் வட்டாரத்தில், மொத்தமுள்ள 186 இடங்களுக்கு 828 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கு, நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. பொங்கலூர் ஒன்றியத்தில், ஒரு மாவட்ட கவுன்சிலர், 13 ஒன்றிய கவுன்சிலர், 16 ஊராட்சி தலைவர், 156 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால், ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 10 பேர், கவுன்சிலர் பதவிக்கு, ஒன்றாவது வார்டு ஏழு பேர், இரண்டாவது வார்டு ஆறு பேர், மூன்றாவது வார்டு ஏழு பேர், நான்கு, ஐந்தாவது வார்டுகளுக்கு தலா ஆறு பேர், ஆறாவது வார்டு 14 பேர், ஏழாவது வார்டு 11 பேர், எட்டாவது வார்டு 10 பேர், ஒன்பதாவது வார்டு ஏழு பேர், 10வது வார்டு ஐந்து பேர், 11, 12வது வார்டு தலா நான்கு பேர், 13வது வார்டு 5 பேர் உட்பட மொத்தம் 92 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.ஊராட்சி தலைவர் பதவிக்கு, கண்டியன்கோவில் ஊராட்சியில் நான்கு, அலகுமலை ஊராட்சி 13, எலவந்தி ஆறு, காட்டூர் மூன்று, கேத்தனூர் ஊராட்சி ஆறு, மாதப்பூர் எட்டு, வடக்கு அவினாசிபாளையம் ஐந்து, நாச்சிபாளையம் எட்டு, பெருந்தொழுவு 13, பொங்கலூர் ஒன்பது, தெற்கு அவினாசிபாளையம் எட்டு, தொங்குட்டிபாளையம் ஐந்து, உகாயனூர் ஐந்து, கள்ளிப்பாளையம் 10, வாவிபாளையம் ஊராட்சி எட்டு பேர் உட்பட 116 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தமுள்ள 16 ஊராட்சி
களிலும் சேர்த்து 156 வார்டு உறுப்பினர் பதவிக்கு 610 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.