sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை!மார் தட்டுகிறார் மா.கம்யூ., வேட்பாளர்

/

நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை!மார் தட்டுகிறார் மா.கம்யூ., வேட்பாளர்

நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை!மார் தட்டுகிறார் மா.கம்யூ., வேட்பாளர்

நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை!மார் தட்டுகிறார் மா.கம்யூ., வேட்பாளர்


ADDED : செப் 29, 2011 10:16 PM

Google News

ADDED : செப் 29, 2011 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மேயர் பதவிக்குப் போட்டியிடுவதே கம்யூ., கட்சிகளுக்கு புதிய அனுபவம்; அதிலும் முதல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் யு.கே.சிவஞானம்(50).

இந்த தேர்தலின் மூன்றாவது அணியாக கருதப்படும் தே.மு.தி.க., கூட்டணியின் கோவை மேயர் வேட்பாளர். கட்சியில் பல தடைகளைத் தாண்டி வாய்ப்புப் பெற்றவர்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி...* முக்கியமான 2 கட்சிகளின் வேட்பாளர்களை சந்திக்கப் போகிறீர்கள்; எப்படியிருக்கிறது இந்த தேர்தல் அனுபவம்?கோவை நகரம், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி; எங்களது கட்சிக்கென்று ஒரு பலம் இருக்கிறது. தே.மு.தி.க., என்கிற பலம் பொருந்திய கட்சியின் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் நிறையவே நம்பிக்கை இருக்கிறது. * கோவையின் வளர்ச்சிக்கென்று என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? நகரில் குடிநீர்ப் பிரச்னை, அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பில்லூர் 2வது குடிநீர்த்திட்டத்தை விரைவாக முடித்து, குடிநீர்ப் பிரச்னையை தீர்ப்பதே எனது முதல் பணியாக இருக்கும். பாதாள சாக்கடைத் திட்டத்தை எல்லாப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தி, விரைவாகவும் முடிக்க நடவடிக்கை எடுப்பேன். துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நகரை தூய்மை நகராக்குவதோடு, அந்தப் பணியாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் சிறந்த திட்டங்களைக் கொண்டு வருவேன். எல்லாவற்றையும் விட, எங்களது கட்சியால் மட்டும்தான் ஊழலற்ற நிர்வாகத்தைத் தர முடியும்.* உள்ளாட்சித் தேர்தலில் அதிகமாக பணம் புழங்குமே; எப்படி சமாளிப்பீர்கள்? கடந்த ஐந்தாண்டுகளில், தி.மு.க.,-காங்.,கூட்டணி, இந்த மாநகராட்சியில் எவ்வளவு ஊழல் செய்தது என்பது ஊருக்கே தெரியும். தன்னலமற்ற எங்களது இயக்கத்தின் தொண்டர் படையும், தே.மு.தி.க.,வின் இளைஞர் படையும் சேர்ந்து அந்த பணபலத்தை முறியடிக்கும்.* பாதாள சாக்கடை ஊழல், பி.எஸ்.யு.பி., திட்ட குளறுபடிக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினீர்கள். நீங்கள் பொறுப்புக்கு வந்தால், என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? விசாரணை கமிஷன் அமைத்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். * வளர்ச்சிக்கு எதிரானவர்கள், கட்டமைப்பு வசதிகளைப் பற்றி கவலைப்படாதவர்கள் என இடது சாரிகளைப் பற்றி ஒரு பேச்சு இருக்கிறதே... தவறான கருத்து; கடந்த ஐந்தாண்டுகளில், கோவை மாநகராட்சியில் கட்டமைப்பு வசதிக்காக எங்களது கவுன்சிலர்கள் ஆவேசமாகப் போராடுகின்றனர். வளர்ச்சியின் மீது எங்களுக்கும் நிறையவே அக்கறை இருக்கிறது. * தே.மு.தி.க.,வுக்கு கோவை மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, அது மாற்றப்பட்டதால் அவர்களின் ஒத்துழைப்பு முழுதாகக் கிடைக்குமா? தே.மு.தி.க., மாவட்டச் செயலாளர்கள் முழு மனதோடு தேர்தல் பணியாற்றுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை 'கேப்டன்' சொல்லைத் தட்ட மாட்டார்கள். * எவ்வளவு ஓட்டு வாங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது? நிச்சயமாக வெற்றி பெறுவோம்; அதில் சந்தேகமேயில்லை.






      Dinamalar
      Follow us