/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
303 பதவி; 1,758 பேர் மனு தாக்கல்
/
303 பதவி; 1,758 பேர் மனு தாக்கல்
ADDED : செப் 30, 2011 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் உள்ள 303 பதவிகளுக்கு, 1,758 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒரு தலைவர், 33 வார்டு கவுன்சிலருக்கு தேர்தல் நடக்கிறது. இதில் தலைவருக்கு 25 பேரும், கவுன்சிலருக்கு 280 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். காரமடை பேரூராட்சியில் ஒரு தலைவர், 18 வார்டு கவுன்சிலருக்கான உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு 15 பேரும், கவுன்சிலருக்கு 127 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். சிறுமுகை பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு 12 பேரும், கவுன்சிலருக்கு 84 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.