/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' மார்கழி விழாக்கோலம்; காத்திருக்கும் 'மெகா' பரிசு: 22ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
/
'தினமலர்' மார்கழி விழாக்கோலம்; காத்திருக்கும் 'மெகா' பரிசு: 22ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
'தினமலர்' மார்கழி விழாக்கோலம்; காத்திருக்கும் 'மெகா' பரிசு: 22ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
'தினமலர்' மார்கழி விழாக்கோலம்; காத்திருக்கும் 'மெகா' பரிசு: 22ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
ADDED : டிச 19, 2024 11:58 PM
கோவை; பெண்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள மார்கழி கோலப்போட்டிகள் வரும் சனிக்கிழமை துவங்கும் நிலையில், 22ம் தேதிக்குள் முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
பெண்களின் கோலத்திறமைக்கு ஊர் அறிய மகுடம் சூட்டும் வகையில் ஆண்டுதோறும் மார்கழி கோலத்திருவிழா போட்டியை 'தினமலர்' நாளிதழ் நடத்திவருகிறது. பூத்துக்குலுங்கும் மலர்கள், தோகை விரித்தாடும் மயில் என, பல அழகிய உருவங்களை 'தினமலர்' வாசகியர் தத்ரூபமாக கோலமிட்டு, பிரமிக்க வைத்ததை கடந்த ஆண்டுகளில் காணமுடிந்தது.
குறிப்பாக, குழல் ஊதும் கண்ணன், பொங்கலை வரவேற்கும் பானை கோலம் உள்ளிட்டவை அமர்க்களமாக இருந்தது. இந்த ஆண்டு, தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகையும் இணைந்து அப்பார்ட்மென்ட்களில் 'மார்கழி விழாக்கோலம்' என்ற தலைப்பில் போட்டிகளை நடத்துகிறது. இவர்களுடன் அல்ட்ரா, ஸ்ரீ பேபி பிராப்பர்டீஸ் ஆகியனவும் கரம் கோர்த்துள்ளன.
போட்டிகளானது வரும், 21ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜன., 13ம் தேதி வரை, காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை(இதில் ஏதேனும் இரண்டு மணி நேரம் மட்டும்) நடக்கிறது. போட்டியாளர்கள் புள்ளி கோலம், ரங்கோலி, அத்தப்பூ கோலம் என, எதுவேண்டுமானாலும் போடலாம். அதற்கேற்றவாறு பரிசுகள் காத்திருக்கின்றன.
போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் வாசகர்கள், அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் லெட்டர் பேடில், தங்களுடைய பெயர், பிளாட் எண், தொலைபேசி எண், போட்டி நாள், நேரம் போன்ற விபரங்களை பூர்த்தி செய்து, activities@dinamalar.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள மெகா பரிசுகள் வழங்கப்படவுள்ளன. வரும், 22ம் தேதிக்குள் முன்பதிவு செய்வது அவசியம். மேலும் விபரங்களுக்கு, 98940 09213 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்புகொள்ளலாம். வண்ணக் கோலங்களால் வர்ணஜாலமிட பெண்கள் காத்திருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது!