/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இங்கிலாந்துடன் வர்த்தக வாய்ப்பு; தூதரக அதிகாரி கலந்துரையாடல்
/
இங்கிலாந்துடன் வர்த்தக வாய்ப்பு; தூதரக அதிகாரி கலந்துரையாடல்
இங்கிலாந்துடன் வர்த்தக வாய்ப்பு; தூதரக அதிகாரி கலந்துரையாடல்
இங்கிலாந்துடன் வர்த்தக வாய்ப்பு; தூதரக அதிகாரி கலந்துரையாடல்
ADDED : ஆக 14, 2025 08:46 PM

கோவை; இந்தியா --இங்கிலாந்து இடையே ஏற்பட்டுள்ள தாராள வர்த்தக ஒப்பந்தத்தில், கோவைக்கான வாய்ப்புகள் குறித்து கொடிசியா நிர்வாகிகள், இங்கிலாந்து தூதருடன் பங்கேற்ற கலந்துரையாடல் நடந்தது.
இங்கிலாந்து சென்ற இந்திய பிரதமர் மோடி தலைமையிலான வர்த்தக குழுவினர் இந்தியா இங்கிலாந்து இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். இதையடுத்து, கோவையில், புதுச்சேரி தமிழ்நாட்டுக்கான இங்கிலாந்து தூதரக துணை அதிகாரி கலிமா ஹாலன்ட், கொடிசியா நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கோவையிலிருந்து இங்கிலாந்துக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
கொடிசியா பொருளாளர் பொன்ராம், கோவையில் உள்ள தொழில் சூழல், வளர்ச்சி, கல்வி, மருத்துவம், தொழில் முனைவோர் திறன் குறித்து விளக்கினார்.
இரு தரப்பினரும் தாராள பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தில் வணிகத்திற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
இங்கிலாந்து தூதரக துணை அதிகாரி கலிமா ஹாலன்ட் பேசுகையில், இங்கிலாந்தில் இன்ஜினியரிங், வேளாண்மை சார்ந்த பொருட்களுக்கு தேவைகள் உள்ளன.
''தரமான பொருட்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். இரு நாடுகளிடையே பரஸ்பர வர்த்தகத்திற்கு தேவையான பொருட்கள் குறித்து வர்த்தக குழுக்கள் பேச்சு நடத்த நடவடிக்கை எடுக்கலாம், என்றார்.
நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், கொடிசியா உறுப்பினர்களும் பங்கேற்றனர். கொடிசியா கவுரவ செயலாளர் யுவராஜ் நன்றி கூறினார்.