/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் நோய்; குழு ஆய்வு : மத்திய அரசுக்கு எம்.எல்.ஏ. நன்றி
/
தென்னையில் நோய்; குழு ஆய்வு : மத்திய அரசுக்கு எம்.எல்.ஏ. நன்றி
தென்னையில் நோய்; குழு ஆய்வு : மத்திய அரசுக்கு எம்.எல்.ஏ. நன்றி
தென்னையில் நோய்; குழு ஆய்வு : மத்திய அரசுக்கு எம்.எல்.ஏ. நன்றி
ADDED : நவ 11, 2025 10:34 PM
பொள்ளாச்சி: 'தென்னையில் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது வரவேற்கதக்கது,' என, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை: தென்னையில் வெள்ளை ஈ, வேர் வாடல் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மரங்களை வெட்டி வருகின்றனர்.கோவை வேளாண் பல்கலை மெத்தன போக்குடன் செயல்படுகிறது.
இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேளாண் விஞ்ஞானிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் குழு அமைத்து சிறப்பு கவனம் செலுத்தி முழு ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியும், சட்டசபையில் வலியுறுத்தி பேசினேன். ஆனால், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளை வஞ்சிக்கிறது. மத்திய அரசுக்கு நான் அனுப்பிய கடிதத்தின் வாயிலாக, மத்திய வேளாண்மை துறை அமைச்சர், தமிழகம் வந்து விவசாயிகளை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்தார்.
அதன்பின், வேர் வாடல் நோய் குறித்து ஆய்வு செய்ய தென்னை வளர்ச்சி வாரியத்தின் வாயிலாக, ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்ட மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

