/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகளால் இடையூறு: வாகன நெரிசலால் மக்கள் அவதி
/
ஆக்கிரமிப்புகளால் இடையூறு: வாகன நெரிசலால் மக்கள் அவதி
ஆக்கிரமிப்புகளால் இடையூறு: வாகன நெரிசலால் மக்கள் அவதி
ஆக்கிரமிப்புகளால் இடையூறு: வாகன நெரிசலால் மக்கள் அவதி
ADDED : ஆக 13, 2025 07:36 PM

வால்பாறை:
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், வால்பாறையில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளன.
இதேபோல், ஸ்டேன்மோர் சந்திப்பில் இருந்து, சோலையாறு அணை செல்லும் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புக்கடைகள் உள்ளன. இது தவிர, ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களும் நிறுத்தப் படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையில் ஆக்கிரமிப்புகளால் நாளுக்கு நாள் ரோடு குறுகி வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும், மக்கள் ரோட்டில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாமலும் சிரமம் ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டும். நகராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்த தனியாக 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். மக்கள் நடந்து செல்ல வசதியாக சாலையின் இருபுறத்திலும் நடைபாதை அமைக்க வேண்டும்,' என்றனர்.